இந்த அணிகள் தான் உலகக் கால்பந்து கிண்ணத்தை வெல்லும் – இந்திய அணித்தலைவர் சுனில் சேத்ரி!

உலகக் கிண்ண கால்பந்து தொடரை வெல்ல ஜேர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரேசில் அணிகளுக்கு தான் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக இந்திய கால்பந்து அணித்தலைவர் சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் வரும் வியாழக்கிழமை உலகக் கிண்ண கால்பந்து தொடர் தொடங்க உள்ளது. இந்த தொடரில் ஜேர்மனி, பிரேசில், இங்கிலாந்து, ஸ்பெயின், அர்ஜெண்டினா உட்பட 32 அணிகள் கலந்துகொள்கின்றன.
உலகம் முழுவதும் இந்த தொடருக்கு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்திய கால்பந்து அணித்தலைவர் சுனில் சேத்ரியிடம் எந்த அணிக்கு உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது என கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறுகையில் ஜேர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரேசில் ஆகிய நான்கு அணிகளுக்கு உலகக் கிண்ணத்தை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 101 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி, இதுவரை 62 கோல்கள் அடித்துள்ளார்.
Related posts:
|
|