இந்து மகளிர் மாணவி கம்சாயினிக்குத் தங்கம்!

Saturday, March 3rd, 2018

 

யாழ்ப்பாண மாவட்ட பூப்பந்தாட்டச் சங்கம் நடாத்திய பெண்கள் பிரிவு பூப்பந்தாட்டத் தொடரில் 19 வயதுப் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் யாழ்ப்பாணம் இந்து மகளீர் மாணவி  கம்சாயினி தங்கம் வென்றார்.

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய உள்ளக அரங்கில் இடம் பெற்ற இந்த இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவி கம்சாயினியை எதிர்த்து பருத்தித்துறை மெதடிஸ்த மிசன் பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி ராகவி மோதினார். மூன்று செற்களைக் கொண்ட ஆட்டத்தின் முதலிரு செற்களையும் முறையே 22:20,23:21என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி 2:0என்ற நேர் செற் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணம் வென்றார் கம்சாயினி.

Related posts: