இந்துக்களின் போர் சமனிலையில் நிறைவு!

Sunday, March 11th, 2018

யாழ். இந்து மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி அணிகளுக்கிடையிலான ”இந்துக்களின் சவால்” ஒன்பதாவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் கொழும்பு இந்துக் கல்லூரி அணி 165 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்தாடிய யாழ். இந்துக் கல்லூரி அணி 333 ஓட்டங்களைக் குவித்தது.

168 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 223 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதற்கமைய,போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

Related posts: