இந்திய வெற்றியைத் தீர்மானிக்கும் மூவர் – கிரேம் ஸ்மித் கருத்து!
Saturday, December 23rd, 2017
இலங்கை அணியுடன் தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி தென் ஆப்பரிக்கா செல்கிறது. அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. 5 வருடங்களின் முன்னர் டோனி தலைமையில் தென் ஆப்பரிக்கா சென்ற இந்தியா அணி டெஸ்ட் தொடரை இழந்திருந்தது.
தென் ஆப்பரிக்காவில் முன்னள் கேப்டன் கிரேம் ஸ்மித், இந்தியாவை வெற்றிப்பெற கோலி, ரோகித் மற்றும் தவான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-இந்தியாவின் முன்னணி மூன்று துடுப்பாட்ட வீரர்களான, விராட் கோலி, ஷிக்கர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். வேகமாகவும், நெடுநேரம் நிலைத்து நின்று ஆடக்கூடியவர்களாகவும், இக்கட்டான நிலையில் சமாளித்து துடுப்பாட வல்லவர்களாகவும் இருக்கின்றார்கள். கடந்த ஆண்டு தென் ஆப்பரிக்காவில் ஆடியதை காட்டிலும் தற்போது ரோகித் சர்மா சிறந்த வீரராக உள்ளார். தென் ஆப்பரிக்க மண்ணில் இந்தியா வெற்றி பெற வேண்டுமென்றால் இந்த மூன்று பேரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது கட்டாயம். எனவும் குறிப்பிட்டார்.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர், முக்கிய வீரரக்ளின் உபாதை, ஒய்வு காரணமாக கிடைத்த வாய்ப்பை மிகவும் நேர்த்தியாக பய ரோஹித் சர்மா நீண்ட இடைவெளிக்குப்பின் சதம் அடித்தார், தொடர்ந்து வாய்ப்புக்கிடைக்குமா என்பது சந்தேகமே, காரணம் தேர்வுக்குழு எந்த வீரரை தெரிவு செய்வது எனபது தொடர்பான நெருக்கடியில் இருக்கின்றது. அனைத்து வீரர்களும் கிடைக்கும் வாய்ப்பை மிகவும் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றார்கள்.
Related posts:
|
|