இந்திய வீரர்களுக்கு விருந்து வைத்த மாலிங்க!

Sunday, September 3rd, 2017

இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தொடரை வெற்றிகண்டுள்ள நிலையில் இலங்கை அணியின் வீரர் லசித் மலிங்க இந்திய வீரர்களுக்கு விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார்.

முதல் நான்கு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி ஐந்தாவது போட்டிக்கு ஆயத்தமாகின்றது.எனினும் இலங்கை அணி மிகவும் சிக்கலான நிலைமையில் உள்ளது. உலக கோப்பை சுற்று போட்டியில் கலந்து கொள்வதற்கு உட்பட ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் வேக பந்து வீச்சாளர் லிசித் மாலிங்கவின் வீட்டில் நேற்றைய தினம் விருந்து ஒன்று இடம்பெற்றது.இதில் இலங்கை வீரர்கள் உட்பட இந்திய வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரோஷித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Related posts: