இந்திய லெஜண்ட்ஸ் வசமானது சாலை பாதுகாப்பு உலகத் தொடர் !
Sunday, October 2nd, 2022சாலை பாதுகாப்பு உலகத் தொடர் இறுதி போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி, இரண்டாவது முறையாகவும் இந்திய லெஜண்ட்ஸ் அணி சாலை பாதுகாப்பு உலகத் தொடரை வென்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக நமாம் ஓஜா ஆட்டமிழக்காது 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன், வினய் குமார் 36 ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் நுவன் குலசேகர 29 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், 196 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை லெஜண்ட்ஸ் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக இஷான் ஜயரத்ன 51 ஓட்டங்களையும், மஹேல உடவத்த 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இந்திய அணியின் வினய் குமார் 38 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
Related posts:
|
|