இந்திய பகிரங்க பூப்பந்து தொடரின் சாம்பியன் பட்டம் யூகி ஹீற்கு!

Tuesday, February 6th, 2018

இந்தியாவின் டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய பகிரங்க பூப்பந்து தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் யூகி ஷீ சாம்பியன்பட்டத்தை வென்றுள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சீனாவின் யூகி ஷீயும், தாய்வானின் டியன் சென் சோவும் மோதினர். இதில் 21க்கு 18, 21க்கு 14என்ற நேர் செட்களில் யூகி ஷீ வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் முன்னர் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் பெய்வன் சங், இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவைவீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: