இந்திய – நியூசிலாந்து கான்பூர் போட்டியில் நீஷம் இல்லை!

Wednesday, September 21st, 2016

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், நாளை 22) கான்பூரில் ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில், விலாவில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக நியூஸிலாந்து அணியின் சகலதுறை வீரரான ஜிம்மி நீஷம் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், கொல்கத்தாவில், எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு நீஷம் தயாராகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், நீஷமுக்கு பதிலாக எந்தவொரு வீரரையும் நியூஸிலாந்து கிரிக்கெட் சபை பிரதியிடவில்லை.

கடந்த வியாழக்கிழமை (15) இடம்பெற்ற பயிற்சியின்போதே நீஷம் உபாதைக்குள்ளாகியதுடன், இதன் காரணமாக, மும்பை அணிக்கெதிராக டெல்லியில் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியின் இரண்டு இனிங்ஸிலும் துடுப்பெடுத்தாடியிருக்காத நீஷம், வெறும் ஐந்து ஓவர்கள் மட்டுமே பந்துவீசியிருந்தார்.

கடந்த நவம்பரில், மீண்டும் ஏற்பட்ட முதுகு உபாதையொன்றிலிந்து, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காத நீஷமுக்கு, தற்போது விலாவில் ஏற்பட்டுள்ள உபாதை பின்னடைவாக அமைந்துள்ளது.

இடது கணுக்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக, நியூஸிலாந்து அணியின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி, நியூஸிலாந்துக்குத் திரும்பியிருந்த நிலையிலேயே, தற்போது நீஷம் காயமடைந்துள்ளார். சௌதிக்கு பதிலாக மற் ஹென்றி குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதோடு, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு சௌதி திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.

06-1473139778-jimmy-neesham3454-600

Related posts: