இந்திய தொடருக்கு குமார் தர்மசேனவுக்கு வாய்ப்பு!

Tuesday, November 1st, 2016

அலஸ்டர் கூக் தலைமையிலான இங்கிலாந்து அணி வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது. வங்கதேச தொடரை அந்த அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

இதைத் தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி எதிர்வரும் 2ம் திகதி இந்தியாவுக்கு செல்கிறது. அந்த அணி டாக்காவில் இருந்து இந்தியா புறப்படுகிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கு பாகிஸ்தானை சேர்ந்த அலிம் தாரை நடுவராக ஐசிசி நியமித்திருந்தது.தற்போது இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை ஐசிசி திரும்ப பெற்றுள்ளது.

இந்நிலையில் அந்த இடத்திற்கு இலங்கை நடுவர் குமார் தர்மசேனா நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.இங்கிலாந்து அணி கடைசியாக 2012ம் ஆண்டு இந்தியா வந்த போது 4 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: