இந்திய தடுப்புச்சுவர் டிராவிட்டையே கதிகலங்க வைத்த ஒரு பந்துவீச்சாளர்!!

Saturday, December 3rd, 2016

இந்திய கிரிக்கெட் அணியின் ’தடுப்புச்சுவர்’ என்று வர்ணிக்கப்படும் டிராவிட்டுக்கே அச்சுறுத்தலாக விளங்கியுள்ளார் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் டிராவிட் எதிரணி பந்துவீச்சாளர்களின் பொறுமையை அதிகமாக சோதித்து அவர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடுவார்.எவ்வளவு கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசினாலும் அந்த பந்து டிராவிட்டின் காலடியிலே கிடக்கும். அந்த அளவு பல மணி நேரம் அசராமல் நிற்பார்.

இதனாலே அவரை இந்திய அணியின் ’தடுப்புச்சுவர்’ என்று ரசிகர்கள் வர்ணிப்பர். ஆனால் அவரையே ஒரு அவுஸ்திரேலிய பவுலர் அச்சுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து டிராவிட் அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் விளையாடிய போது அவுஸ்திரேலிய அணி அசைக்க முடியாத ஒரு அணியாக இருந்தது. அதிலும், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் ஒரு அச்சுறுத்தல் பவுலராக விளங்கினார்.ஆஃப் ஸ்டெம்பு பகுதியில், தொடர்ச்சியாக துல்லியமாக பந்து வீசி தொல்லை கொடுக்கும் பவுலர் என்றால் அது மெக்ராத் தான்.

அவர் அவுட்-ஸ்விங், இன்-ஸ்விங், பவுன்ஸ் என பல வகையாக வீசி துடுப்பாட்ட வீரர்களை குழப்பத்திலேயே வைத்திருப்பார். எல்லா பந்துகளுமே விக்கெட்டை வீழ்த்தும் திட்டத்துடனே வீசப்படும்.அவர் துடுப்பாட்ட வீரர்களிடம் இரக்கம் காட்டுவார் என்று எதிர்பார்க்கவே கூடாது. இரக்கமில்லாத பவுலர் என்றால் அது மெக்ராத் தான் என்று கூறியுள்ளார்.

driavind_vc1

Related posts: