இந்திய டெஸ்ட் தொடர்: மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!

Wednesday, July 13th, 2016

இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 12 வீரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகியுள்ள இந்திய அணி தற்போது பயிற்சிப் போட்டியில் விளையாடி வருகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் விக்கெட் கீப்பர் மற்றும் முன்னணி துடுப்பாட்ட வீரரான ராம்தின் நீக்கப்பட்டுள்ளார். அறிமுக வீரராக சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸ் இடம்பெற்றுள்ளார்.

இந்த தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் ஹோல்டர் தலைவராகவும், கிராக் பிராத்வெய்ட் துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி விபரம் –

ஜேசன் ஹோல்டர் (அணித்தலைவர்), கிராக் பிராத்வெய்ட் (துணைத்தலைவர்), தேவேந்திர பிஷூ, பிளாக்வுட், பிராத்வைட், டேரன் பிராவோ, சந்திரிகா, ரோஸ்டன் சேஸ், ஷேன் டவ்ரிச் (விக்கெட் கீப்பர்), கேபிரியல், லியான் ஜான்சன், சாமுவேல்ஸ்.

Related posts: