இந்திய சுழலில் சுருண்டது இங்கிலாந்து!

Monday, November 21st, 2016

இந்தியா– இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது.

இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.நவம்பர் 17ம் திகதி விசாகப்பட்டினத்தில் தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, முதல் இன்னிங்சில் 455 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர், முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 255 ஓட்டங்கள் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய 204 ஓட்டங்கள் எடுத்தது. இந்நிலையில், நான்காவது நாள் பாதியில் 405 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கி விளையாடிய இங்கிலாந்து நான்காம் நாள் முடிவில் 87 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் இழந்திருந்தது.

இன்று 5வது நாள் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சுழலில் 158 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் இந்திய அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று 1-0 என தொடரில் முன்னிலைப்பெற்றுள்ளது.

Indian players celebrate the wicket of England's batsman Jonny Bairstow during the second day of the first test cricket match between India and England in Rajkot, India, Thursday, Nov. 10, 2016. (AP Photo/Rafiq Maqbool)

Related posts: