இந்திய சகலதுறை வீரர் ஜடேஜா புதிய சாதனை!

Sunday, December 17th, 2017

இந்திய அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா, அண்மைக்காலமாக ஓய்வு எனும் பெயரில் இந்திய ஒரு நாள் மற்றும் ரீ20 போட்டிகளிலிருந்து ஓரங்கப்பட்டு வருகின்றார், இந்நிலையில் ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் இணைத்துக்கொள்ளப்படாத ஜடேஜா தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகின்றார். இதில் நேற்று நடைபெற்ற ஜாம்நகர் மற்றும் அம்ரேலி ஆகிய மாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் ஜடேஜா ஆறு பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.
ஜாம்நகர் அணிக்காக களமிறங்கிய ஜடேஜா 69 பந்துகளை எதிர்கொண்டு 154 ஓட்டங்களைப்பெற்றுள்ளார். அம்ரேலி அணியின் நீலம் வம்ஜாவின் ஓவருக்கு ஜடேஜா ஆறு சிக்ஸர்களை அதிரடியாக விளாசியிருந்தார்.
ஜடேஜா 10 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகளை அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். முதலில் துடுப்பெடுத்தாடிய ஜாம்நகர் அணி 239 ஓட்டங்களை குவிக்க, பதிலளித்த அம்ரேலி அணி 118 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதற்கு முன்னர் இந்திய அணிசார்பில் யுவராஜ் சிங் மற்றும் ரவிசாஸ்திரி ஆகியோர் ஆறு சிக்ஸர்களை விளாசி சாதனைப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: