இந்திய கிரிக்கெட் சபை இன்று கூடுகிறது!

Friday, September 30th, 2016

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முக்கிய பொதுக்குழுக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெறுகின்றது.

70 வயதுக்கு மேற்பட்டோர் நிர்வாக பொறுப்பில் இருக்கக் கூடாது, அமைச்சர்கள், அதிகாரிகள் நிர்வாகிகள் பொறுப்பில் இருக்கக் கூடாது, ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கே வழங்கவேண்டும் உட்பட பல்வேறு பரிந்துரைகளை லோதாகுழு முன்வைத்தது.

இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது தனது நிலைப்பாட்டு அறிக்கையை முன்வைத்து மேற்படி பரிந்துரைகளை நிறைவேற்றவேண்டுமென லோதா குழு தெரிவித்தது. அதனையடுத்து இந்திய கிரிக்கெட் சபைக்கு இரண்டு காலக்கெடுக்கள் விதிக்கப்பட்டன.

அதன் ஒரு காலக்கெடு இன்று நிறைவடையவுள்ள நிலையில், லோதா குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

அதேநேரம், இந்திய தெரிவுக்குழுவில் தற்போது 5 உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.  இதில் டெஸ்டில் போட்டி அனுபவம் இல்லாத நிலையில் ஹகன் கோடா, ஜதின் பரஞ்ச்போ ஆகியோரை நீக்குவது குறித்தும் .

BCCI-logo

Related posts: