இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சந்தீப் பாட்டீல் !

Sunday, June 5th, 2016

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தெரிவுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் விண்ணப்பித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த பிளெட்சரின் பதவிக்காலம் கடந்த 2015ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியுடன் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து ரவி சாஸ்திரி இயக்குனராக செயல்பட்டு வந்த நிலையில், சஞ்சய் பாங்கர், பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் உதவி பயிற்சியாளராக பணியாற்றி வந்தனர்.

இவர்களுடைய பதவிக்காலமும் முடிவடைந்த நிலையில் புதிய பயிற்சியாளரை கிரிக்கெட் வாரியம் தேடி வருகிறது.

இதற்கான விளம்பரம் வெளியாகியுள்ள நிலையில், பலரும் விண்ணப்பங்களை அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தெரிவுக்குழு தலைவரான சந்தீப் பாட்டீல் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

இதற்கு முன்பாக இவர் கென்யா, ஓமன் அணிகளுக்கு பயிற்சியாராக இருந்துள்ளார், குறிப்பாக கென்யா பயிற்சியாளராக இருந்த போது அந்த அணி 2003ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Related posts: