இந்திய கிரிக்கட் வீரர்களுக்கும் சந்தரப்பம் வழங்கப்பட வேண்டும் – சுரேஷ் ரெயினா!

Sunday, May 10th, 2020

சர்வதேச இருபதற்கு 20 போட்டிகளில் மத்திய தேசிய கட்டுப்பாடு எதுவும் இன்றிய நிலையில் இந்திய கிரிக்கட் வீரர்கள் பங்குகொள்வதற்கான சந்தரப்பம் வழங்கப்பட வேண்டும் என துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெயினா தெரிவித்துள்ளார்

‘ஆட்சேபனை இல்லை’ என்ற அனுமதி பத்திரத்தினை பெறாத சந்தர்ப்பத்தில், அவர்கள் சர்வதேச லீக் போட்டிகளில் பங்குகொள்ள முடியாது என்ற நிபந்தனை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலை குறித்து இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை பரிசீலனை செய்து இந்திய கிரிக்கட் வீரர்களுக்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வெளிநாடுகளில் இடம்பெறும் லீக் போட்டிகளில் பங்கு கொள்வதற்கான உரிமை இந்திய வீரர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

ஆனால், பெரும்பாலன கிரிக்கட் விளையாடும் நாடுகளை சேர்ந்தவர்கள் தமது வழமையான கிரிக்கட் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், லீக் போட்டிகளிலும் விளையாடுவதற்கான சந்தப்பம் வழங்கப்படுவதாக இந்திய துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெயினா தெரிவித்துள்ளார்

Related posts: