இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அதிருப்தி !

Wednesday, February 19th, 2020

2023 முதல் 2031 வரையான உரிமைகள் சுழற்சியில் எதிர்கால நிகழ்வுகள் தொடர்பான தங்களது ஆட்சேபனைகளை சர்வதேச கிரிக்கட் பேரவை கவனத்திற் கொள்ளாமை தொடர்பில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டுபாயில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பான முரண்பாட்டு நிலை வெளிப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 முதல் 2031 வரையான உரிமைகள் சுழற்சியில் எதிர்கால நிகழ்வுகள் தொடர்பாக ஆராய்வதற்காக சர்வதேச கிரிக்கட் பேரவை, அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமை நிர்வாக அதிகாரி மனு சவ்னி, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் சிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம்செய்து குறித்த விடயம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

எனினும், அவர் விஜயம் மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்திய விடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் 2023 முதல் 2031 வரையான உரிமைகள் சுழற்சியில் எதிர்கால நிகழ்வுகள் தொடர்பாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: