இந்திய அணி வெற்றி !

Wednesday, January 16th, 2019

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி, 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.

அடிலெய்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 299 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி, 49.2 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இந்திய அணித் தலைவர் விராட் கோலி 104 ஓட்டங்களை அதி கூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 34 ஓட்டங்களினால் வெற்றிபெற்றிருந்தது.

இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதன், ஊடாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடர் 1க்கு1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Related posts: