இந்திய அணி விபரம் அறிவிப்பு!

Tuesday, May 9th, 2017

இங்கிலாந்தில் நடைபெற உள்ள சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் விபரத்தை அந்த நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் புதிய வருவாய் பகிர்விற்கு எதிர்ப்பு வெளியிட்டு, குறித்த தொடரை புறக்கணிக்க போவதாக இந்திய கிரிக்கெட் சபை அறிவித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலையிட்டு அந்த தொடருக்கான அணியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் சபைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து குறித்த பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அணித்தலைவர் விராட் கோஹ்லி, தோனி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, ரஹானே, யுவராஜ் சிங், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், மனீஷ் பாண்டே, பும்ரா ஆகியோர் விளையாட உள்ளனர். மினி உலக கிண்ணம் என புகழ்பெற்ற சம்பியன்ஸ் கிண்ணம் தொடர் லண்டனில் எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: