இந்திய அணி தோற்றது நன்மையே – டிராவிட்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா இழந்ததன் மூலம் உலகக்கோப்பை தொடருக்காக தன்னை சுயபரீட்சை செய்துகொள்ளும் வாய்ப்பாக இதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. உலகக்கோப்பைக்கு முன் இந்தியா விளையாடிய கடைசி தொடர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.
ஆனால், இதில் இந்தியா தோல்வியடைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கூறியதாவது, இந்திய அணியின் இந்த தோல்வி நல்லதுதான்.
இது உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள உதவும். இத்தோல்வியை கவனத்தில் கொண்டு இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டும் என கூறியுள்ளார்.
Related posts:
T20 தொடரில் இருந்து கம்மின்ஸ் விலகல்!
மீண்டும் அணியில் தோனி – மகிழ்ச்சியில்ரசிகர்கள்!
தேசிய குத்துச்சண்டை அணியில் இடம் பிடித்த வவுனியா மாணவன்!
|
|