இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது!
Thursday, February 15th, 2018
இந்தியா தென்னாபிரிக்காவிற்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 5ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 73 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 4:1 என்ற ரீதியில் கைப்பற்றியது.
நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ரோஹித் சர்மா 115 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பதிலளித்த தென்னாபிரிக்க அணி 42.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் போட்டித் தொடர் ஒன்றை இந்திய அணி வெற்றிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஹேரத்தை பாராட்டிய மத்தியூஸ் !
மோண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் : 11 ஆவது சாம்பியன் பட்டம் வென்ற ராபேல் நடால்!
இலங்கை அணி இன்னிங்ஸ், 280 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி!
|
|