இந்திய அணி தேர்வுக்குழு தலைவராக எம்.எஸ்.கே. பிரசாத் நியமனம்!

Thursday, September 22nd, 2016

இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு தலைவரான சந்தீப் பாட்டீலின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.கே பிரசாத், இந்திய கிரிக்கெட் அணி புதிய  தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 87-ஆவது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எம் . எஸ். கே. பிரசாத், இந்திய அணிக்காக ஆறு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 17 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கடந்த 1998- ஆண்டில், வங்கதேச அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய எம் . எஸ். கே. பிரசாத், 1999-ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே, முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், இந்திய இளையோர் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

_91325440_1017772

Related posts: