இந்திய அணியை விட்டு வெளியேறுங்கள் – கவாஸ்கர் !

Friday, June 23rd, 2017

கோஹ்லி மற்றும் கும்ப்ளே-வின் பிரச்சனையால் இந்திய அணி இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இதில் பெரும்பாலான வீரர்கள் கும்ப்ளே-வுக்கு தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர், கும்ப்ளேவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறியுள்ளார். அதில், கோஹ்லிக்கும், கும்ப்ளேவுக்கும் என்ன பிரச்சனை என்பது எனக்குத் தெரியாது.

உங்களைப் பொறுத்தவரை உங்களை எதுவும் சொல்லாத, நீங்கள் சொல்வதை மட்டுமே கேட்கும் நபர்தான் பயிற்சியாளராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவரைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள். ஜாலியா இருங்கள். ஷாப்பிங் போங்க என்று கூறும் பயிற்சியாளரைத்தான் உங்களுக்குப் பிடிக்கும். கும்ப்ளே போன்ற நபர்கள் நல்ல முடிவை எதிர்பார்க்கக் கூடிய, வீரர்களை உங்களுக்குப் பிடிக்காது. அதுபோன்றவர்களை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் தன்னை பொறுத்த வரை கும்ப்ளே மீது யாரெல்லாம் புகார் கூறுகிறார்களோ, குற்றம் சாட்டுகிறார்களோ அவர்கள் இந்திய அணியை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.