இந்திய அணியை செப்பேல் அணியாக மாற்ற நினைத்தார் அவர் – சௌரவ் கங்குலி

Sunday, January 28th, 2018

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி, தனது புத்தகத்தில், பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தனது கிரிக்கெட் வாழ்வை அழிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சவுரவ் கங்குலி நுடநஎநn புழனள யுனெ யு டீடைடழைn ஐனெயைளெ எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். சுமார் 500 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை ஐ.பி.எல் தொடரின் போது வெளியிடவுள்ளார்.

இந்த புத்தகத்தில் இந்திய கிரிக்கெட்டைப் பற்றிய பல உண்மைகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக கிரேக் சேப்பல் பதவியேற்ற பின் இந்திய அணியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கங்குலி எழுதியுள்ளார்.

மேலும் கிரேக் சேப்பல் குறித்து கங்குலி புத்தகத்தில் கூறுகையில்,

கடந்த 2005 ஆம் ஆண்டு சிம்பாவே தொடருக்கு முன்னதாக ஒருநாள் மாலையில், கிரேக் சாப்பல் டெஸ்ட் அணிக்கான பட்டியலை என்னிடம் காட்டினார்.

நான் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் அந்த பட்டியலில் முக்கிய வீரர்கள் எவரும் இடம்பெற்றிருக்கவில்லை. அவர் என்ன செய்ய முயல்கிறார் என்று நான் குழம்பினேன்.

அந்த தொடருக்கு முன்னதாக ஏதோ தவறாகவுள்ளது என்று நான் நினைத்தேன். அவர் என்ன செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஏதோ தவறாக முடியப் போகின்றது என்பது மட்டும் எனக்கு கண்டிப்பாக தோன்றியது.

இந்திய கிரிக்கெட்டில் அவருடைய அணுகுமுறை வேறு விதமாக இருந்தது. அது எதிர்வினை ஆற்றக் கூடியதாக எனக்குத் தெரிந்தது.

எதுவாக இருந்தாலும் கடந்த 2003 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய தொடருக்குத் தயாராக எனக்கு உதவிய கிரேக் சேப்பல், சிம்பாவே தொடரில் அவ்வாறு இல்லை.

அவரின் பரிந்துரைகளை நான் புறந்தள்ளினேன். அவர் விரும்பிய நபர்கள், இந்திய கிரிக்கெட்டிற்கு மூன்று மாதங்களுக்கு அங்கு இருந்தபோது நிறைய செய்திருந்தார்கள் என்பதை அவருக்கு நான் தெளிவாக எடுத்துரைத்தேன்.

கடினமான சூழலில் முடிவுகளை எடுக்கவும், சூழ்நிலையை புரிந்து கொள்ளவும் அவருக்கு நிறைய கால அவகாசம் தேவைப்பட்டது.

அவர் இந்திய அணியை கிரேக் சேப்பலின் அணியாக மாற்ற நினைக்கிறார் என்பது எனக்கு மிகவும் தெளிவாக புரிந்தது என தெரிவித்துள்ளார்.

Related posts: