இந்திய அணியில் இடம்பிடிக்க திணறுகிறேனா? – மனம் திறக்கும் ரோஹித் ஷர்மா!

Sunday, March 5th, 2017

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் யாரையும் நான் போட்டியாக கருதவில்லை என இந்திய வீரர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி வீரராக திகழும் ரோஹித் ஷர்மா டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

காயம் காரணமாக சில மாதங்கள் ஓய்வில் இருந்த அவர் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டரில் ஆடும் ரகானே, கருண் நாயர் ஆகியோர் ரோஹித் ஷர்மாவுக்கு கடும் போட்டியாக இருக்கிறார்கள்.

இது குறித்து ரோஹித் ஷர்மா கூறுகையில், இந்திய அணிக்காக விளையாடும் ஒரு போட்டியை கூட தவற விட நான் விரும்பவில்லை. எனது உடல் தகுதியை நிரூபித்து விட்டு, நடந்து கொண்டிருக்கும் அவுஸ்ரேலியா தொடரில் பங்கேற்க விரும்புகிறேன். மேலும், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் யாரையும் நான் போட்டியாக கருதவில்லை. எனக்கு நானே போட்டி எனவும் அவர் கூறியுள்ளார்

Related posts: