இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நீக்கம்!

Wednesday, August 8th, 2018

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர், Jasprit Bumrah நீக்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போட்டிக்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்த அவர் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் முன்னர் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: