இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் நியமனம் எப்போது?

Friday, June 23rd, 2017

இலங்கைக்கான கிரிக்கட் சுற்றுப் பயணத்துக்கு முன்னதாக, இந்திய அணிக்கான புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் சிரேஷ்ட அதிகாரி ராஜிவ் சுக்லா இதனைத் தெரிவித்துள்ளார் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த அனில் கும்ளே, அணித்தலைவர் விராட் கோஹ்லியுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, தமது ஒப்பந்தகாலத்தை நீடிக்காது, பதவி விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் அணிக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுக்லா தெரிவித்துள்ளார் இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20க்கு20 கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்காக அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts: