இந்திய அணியின் பிரபல துடுப்பாட்ட வீரர் ஓய்வு!

இந்திய அணியின் பிரபல துடுப்பாட்ட வீரரான கெளதம் கம்பீர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர், இந்திய அணி 2007ஆம் ஆண்டு T-20 உலகக் கோப்பையை வெல்லும்போது 57 ரன்கள் அடித்து முத்திரை பதித்தார். 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் போது 97 ரன்கள் குவித்து முத்திரை பதித்தார்.
இந்நிலையில் நேற்று(04) அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்த ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
37 வயதாகும் கெளதம் கம்பீர் கடந்த 2003 ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகம் ஆனார். இந்திய அணிக்காக 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அத்துடன் டெஸ்ட் போட்டியில் 22 அரைசதம் 9 சதங்களுடன் 4154 ரன்களும், ஒருநாள் போட்டியில் 34 அரைசதம், 11 சதங்களுடன் 5238 ரன்களும், டி20 7 அரைசதங்களுடன் 932 ரன்களும் சேர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
|
|