இந்திய அணியின் பயிற்சியாளராக ஷேன் வோர்னே?

Saturday, April 2nd, 2016

இந்திய கிரிக்கெற் அணியின் பயிற்சியாளராக விரும்புவதாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

இந்திய அணி பயிற்சியாளர் யாரும் இல்லாமலேயே தற்போது விளையாடி வருகிறது. இந்திய அணியின் தற்போதைய மேலாளராக இருந்துவரும் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி டி20 உலககிண்ணம் தொடருக்கு பின்னர் ஓய்வு பெறக்கூடும் என கூறப்படுகிறது.

எனவே, இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் பந்துவீச்சாளர் ஷேன் வார்னே விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது – இந்திய அணியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். இந்திய அணி வீரர்கள் மிகவும் திறமைசாலிகள். எனது வாழ்க்கையில் எந்த வாய்ப்பையும் நான் மறுத்ததில்லை. ஒரு வேளை இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளுவேன் என தெரிவித்துள்ளார்

Related posts: