இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கவுதம் கம்பீர் – உறுதிப்படுத்தியது பிசிசிஐ!

Wednesday, July 10th, 2024

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் பேரவையின் செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்ச்பே மற்றும் சுலக்ஷனா நாயக் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு செவ்வாயன்று ஒருமனதாக கவுதம் கம்பீரை இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பரிந்துரைத்தது.

இதன்படி, ஜூலை 27, 2024 முதல் இலங்கை அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20 போட்டிகளில் விளையாட உள்ள தொடரின் போது அவர் தனது கடமைகளை பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் 2024 தொடரில் கவுதம் கம்பீர் வழிகாட்டியாக செயற்பட்ட கொல்கத்தா அணி இறுதிப் போட்டியில் அபார வெற்றியை பதிவுசெய்திருந்தது.

இந்நிலையில், அப்போதிருந்து கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படுவார் என்ற செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனிடையே, விவிஎஸ் லக்ஷ்மனின் வழிகாட்டுதலின் கீழ் இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், மூன்று T20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இலங்கை தொடரின் போது கம்பீர் கடமைகளை பொறுப்பேற்பார் என்று இந்திய கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: