இந்திய அணிக்கு 1 மில்லியான் டொலர் பரிசு யாருக்கு?

Friday, February 17th, 2017

அவுஸ்திரேலியா அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஐசிசி இந்திய அணிக்கு 1 மில்லியன் டொலர் பரிசாக வழங்கும் என அறிவித்துள்ளது.

தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருப்பதற்காக இந்த பரிசு வழங்கப்படும். ஏப்ரல் 1 ஆம் திகதி இந்தப் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசை பெற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ஒரு போட்டியில் வென்றால் போதும்.

ஆனால், அவுஸ்திரேலிய அணி இந்தப் பரிசை பெறுவதற்கு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

இதைத் தொடர்ந்து இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் திகதி புனேவில் நடைபெற உள்ளது.

03-1425358652-icc-cricket-600

Related posts: