இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் இலங்கை வீரர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்!

நடைபெறவுள்ள இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் இலங்கை வீரர்கள் உளவுரணுடன் போட்டியிடும் ஆற்றலை ஊக்குவிப்பது சகலரதும் பொறுபாகும் என்று விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைபேச்சாளருமான தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தாம் ஒருபோதும் குற்றவாளிகளை பாதுகாக்கப் போவதில்லை என்று தெரிவித்த அவர் வெளிப்பிரச்சினைகளில் சிக்காமல் நாட்டுக்காக பொறுப்புக்களை நிறைவேற்றுவது விளையாட்டுப் போராட்டியாளர்களின் கடமையாகும்.விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற ரீதியில் துறைசார் அபிவிருத்pதியில் தலையீடு செய்வதும், அது பற்றி கருத்து வெளியிடுவதும் தமது உரிமை என்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைபேச்சாளருமான தயாசிரி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|