இந்திய அணிக்கு அச்சம் – பிரபல வீரரின் கூற்றால் சர்ச்சை!
Thursday, March 23rd, 2017அவுஸ்திரேலியாவுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்து விடுவோம் என இந்தியா பயப்படுகிறது என மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார். அவுஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ஒரு போட்டி டிராவான நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. யாருக்கு கோப்பை என்பதை நிர்ணயிக்கும் நான்காவது போட்டி நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ள மிட்செல் ஸ்டார்க் கூறுகையில், இந்திய அணி எங்களை கண்டு அஞ்சுகிறது. நான்காவது டெஸ்டில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயம் அவர்களுக்கு உள்ளது.
புனே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு தான் இரு அணிகளுக்கும் இடையே வார்த்தை மோதல் அதிகமானது. தர்மசாலா போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெறும் என தான் கருதுவதாக கூறியுள்ளார்.
Related posts:
|
|