இந்தியா 622 ஓட்டங்கள் குவிப்பு: துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை!

Saturday, August 5th, 2017

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக இந்தியா 622 ஓட்டங்களை குவித்துள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி, 622 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், இலங்கை அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.

இந்திய அணி சார்பில் புஜாரா 133 ஓட்டங்களையும், ரஹானே 132 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.தற்போது இந்திய அணியின் 622 ஓட்டங்களை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Related posts: