இந்தியா – வங்கதேச போட்டியில் சூதாட்டம்!

Monday, March 28th, 2016

இந்தியா- வங்கதேச அணிகள் மோதிய போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்றும்  இதை விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் தவுசீப் அகமது கூறியுள்ளார்.

பெங்களூரில் நடந்த டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இந்தியா- வங்கதேச அணிகள் மோதியது.

இதில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 3 பந்தில் 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் வங்கதேச வீரர்கள் 3 பேர் வரிசையாக ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 1 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாகவும், இதை சர்வதேச கிரிக்கெட் வாரியம் விசாரிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழல் வீரர் தவுசீப் அகமது கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “வங்கதேச அணி நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது.

அந்த போட்டியின் கடைசி நேரத்தில் அனுபவ வீரர்களே களத்தில் இருந்தனர். போட்டியை சமன் செய்து விட்டு பெரிய ஷாட்டுகளை அவர்கள் முயற்சி செய்திருக்கலாம். ஆனால் ஏன் அப்படி செய்தார்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்தப் போட்டி பற்றி என்ன கூறுவது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் சர்வதேச கிரிக்கெட் வாரியம் இப்போட்டி குறித்து விசாரணை நடத்துவதில் தவறு இல்லை” என்று கூறியுள்ளார்

Related posts: