இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையேயான 20 ஓவர் போட்டிக்கு அனுமதி!

Wednesday, August 3rd, 2016

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் கொண்ட இந்த தொடர் ஆகஸ்ட் 22-ந்திகதிதியுடன் முடிகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இந்தியா வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே இரண்டு 20 ஓவர் போட்டிகளை அமெரிக்காவில் ஆகஸ்ட் 24 மற்றும் 28 ஆம் தேதிகளில்  நடத்த இரு நாட்டு நிர்வாகமும் திட்டமிட்டது.

இந்த நிலையில், அமெரிக்காவில்  மேற்கண்ட 20 ஓவர் போட்டிகளை நடத்த பிசிசிஐ செயற்குழு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போட்டி நடைபெறுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக 2012-ம் ஆண்டில் இருந்து அங்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts: