இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடினால் ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல் – கிளார்க்!

Friday, March 3rd, 2017
இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட் செய்யுமானால், அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவது எளிதல்ல என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை பெங்களூரில் தொடங்கவுள்ள நிலையில்,
அது தொடர்பாக கிளார்க் மேலும் கூறியதாவது:
பெங்களூரில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்துவது மிகவும் கடினமாகும். புணேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி, டாஸ் வென்று முதலில் பேட் செய்திருக்குமானால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்குமா என்று தெரியவில்லை. இந்திய ஆடுகளங்களில் முதல் இன்னிங்ஸில் எடுக்கும் ஸ்கோர் மிக முக்கியமானதாகும். முதல் இன்னிங்ஸில் 450 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டால், அந்த போட்டியில் யார் டாஸ் வென்றாலும் அது ஒரு பிரச்னையே இல்லை. முதல் இன்னிங்ஸில் குவிக்கப்படும் ரன்கள்தான் அந்தப் போட்டியின் முடிவை தீர்மானிக்கும். எனவே முதல் இன்னிங்ஸில் அதிக ரன் குவிப்பதிலேயே இரு அணிகளும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
08-1439033938-michael-clarke35-600

Related posts: