இந்தியா செல்லும் நியூசிலாந்து அணி அறிவப்பு!

Tuesday, August 30th, 2016

நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

T20 போட்டியை 1-0 என்ற கணக்கில் இழந்திருந்தது,எனினும் தென்னாப்பிரிக்காவுடன் நியூசிலாந்து அணி இரு டெஸ்ட் போட்டிகளை தற்பொழுது விளையாடி வருகின்றது. இந்த போட்டிகள் நிறைவடைந்ததும் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

இந்தியா- நியூலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 22 ஆம் திகதி கான்பூரில் ஆரம்பமாகின்றது. மீதமுள்ள இரு டெஸ்ட் போட்டிகளும் கொல்கத்தா மற்றும் இந்தூரில் இடம்பெறவுள்ளது.

5 ஒருநாள் போட்டிகள் அக்டோபர் 16 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் முறையே தர்மசாலா, டெல்லி, மொகாலி, ராஞ்சி, விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில்இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: