இந்தியா – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!

Tuesday, June 12th, 2018

ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெற்றதன் பின்னர் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டி இந்திய அணிக்கு எதிராக பெங்களூரில் இடம்பெறவுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியுடனான இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு அஜின்கியா ரஹானே தலைமை தாங்குகிறார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை விட தமது அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் முன்னிலையில் உள்ளதாகவும் இந்திய அணிக்கு அவர்கள் மிகவும் சவாலாக விளங்குவார்கள் என்றும் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts: