இந்தியா ஆதிக்கம்: சுருண்டது இங்கிலாந்து!

Saturday, November 19th, 2016

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, அணித்தலைவர் விராட் கோஹ்லி (167), புஜாரா (119) ஆகியோரின் அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 455 ஓட்டங்கள் சேர்த்தது.

இங்கிலாந்து அணி சார்பில், ஆண்டர்சன், மொய்ன் அலி தலா 3 விக்கெட்டும், ஆதில் ரஷீத் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இதன் பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து, இந்திய அணியின் தாக்குதல் பந்துவீச்சில் திணற ஆரம்பித்தது.

நேற்றைய 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பென்ஸ்டோக்ஸ் (12), பேர்ஸ்டோவ் (12) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. கைவசம் 5 விக்கெட்டுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடர்ந்து சொதப்பியது.

தொடர்ந்து விளையாடிய பென்ஸ்டோக்ஸ் (70), பேர்ஸ்டோவ் (53) இருவரும் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்கள் நிலைக்கவில்லை.இதனால் இங்கிலாந்து அணி 255 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஆதில் ரஷீத் (32) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சுழலில் மிரட்டிய அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், சமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, ஜெயண்ட் யாதவ் ஆகியோர்கள் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.தற்போது 200 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கும் இந்திய அணி 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: