இந்தியா – அவுஸ்திரேலிய தொடர் – விராட் கோலி – தகர்க்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் இலக்கு!

Sunday, March 12th, 2023

இந்தியா அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான தொடர் நடைபெற்று வருகிறது.

நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்தியாவும், மூன்றாவது போட்டியை அவுஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றன.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி, அபாரமாக 480 ஓட்டங்களை விளாசியது.

அதிகபட்சமாக உஸ்மன் கவாஜா 180 ஓட்டங்களும், கேமரன் க்ரீன் 114 ஓட்டங்களும் எடுத்திருந்தனர். இந்த தொடரில், இந்திய அணி 3-1 என்று வெற்றி பெற்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

நான்காவது போட்டியில் சமநிலை செய்யும் பட்சத்தில், இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது, இலங்கை – நியூசிலாந்து தொடரின் முடிவை பொறுத்தே அமையும்.

இந்திய அணியில் ஷுப்மன் கில் அதிகபட்சமாக 128 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா, புஜாரா, ஜடேஜா, கே.எஸ். பரத் என வரிசையாக ஆட்டமிழக்க, விராட் கோலி நிதானமாக விளையாடி 241 பந்தில் தன் 28 ஆவது சதத்தை கடந்தார்.

இதற்கு முன்னர் விராட் கோலி கடந்த நவம்பர் 2019ஆம் ஆண்டில் தனது கடைசி டெஸ்ட் சதத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: