இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பம்!

Saturday, January 12th, 2019

இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், Rohit Sharma,  Shikhar Dhawan, Ambati Rayudu, MS Dhoni, Kedar Jadhav, Ravindra Jadeja, Bhuvneshwar Kumar, Kuldeep Yadav, Khaleel Ahmed,  மற்றும்  Mohammed Shami ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Aaron Finch  தலைமையிலான அவுஸ்திரேலிய அணியில்,  Alex Carey, Usman Khawaja, Shaun Marsh, Peter Handscomb, Marcus Stoinis, Glenn Maxwell, Peter Siddle, Jhye Richardson, Nathan Lyon மற்றும் Jason Behrendorff ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரண்டாவது போட்டி எதிர்வரும் 15ஆம் திகதி அடிலெய்டிலும், மூன்றாவது போட்டி 18ஆம் திகதி மெல்போனிலும் நடைபெறவுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற 20க்கு 20 போட்டிகள் 1க்கு 1 என்று சமநிலையில் நிறைவடைந்த அதேவேளை, டெஸ்ட் போட்டி தொடரில் 2க்கு 1 எனற அடிப்படையில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.