இந்தியா அபார வெற்றி!
Sunday, June 12th, 2016ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி நேற்று ஹராரே ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சில் திணற ஆரம்பித்தது. இதனால் 49.5 ஓவரில் 168 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஜிம்பாப்வே அணி சார்பில் சிக்கும்புரா மட்டும் அதிகபட்சமாக 41 ஓட்டங்கள் குவித்தார். பும்ரா 4 விக்கெட்டுகளையும், குல்கரனி, ஸ்ரண் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக கருண் நாயர், லோகேஷ் ராகுல் களமிறங்கினர். கருண் நாயர் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
இதனையடுத்து நாயுடு, லோகேஷ் ராகுல் நிதானமாக ஆடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். 42.3 ஓவரில் இந்திய அணி 1 விக்கெட் மட்டும் இழந்து 173 ஓட்டங்கள் பெற்று 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
லோகேஷ் ராகுல் 100 ஓட்டங்களுடனும், ராயுடு 62 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றி மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
Related posts:
|
|