இந்தியாவை வென்றால் வரலாற்றில் இடம்: ஸ்டீவ் ஸ்மித் !

Saturday, February 11th, 2017
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றால் வரலாற்றில் சிறந்த வீரர்கள் என்ற பெருமையை பெறலாம் என ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.
இம்மாதம் இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் போட்டி வரும் 23ல் புனேயில் துவங்குகிறது. அடுத்தடுத்த போட்டிகள் பெங்களூரு (மார்ச் 4-8), ராஞ்சி (மார்ச் 16-20), தரம்சாலாவில் (மார்ச்25-29) நடக்கவுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்ததாவது
இந்திய டெஸ்ட் தொடர் எங்கள் வீரர்களுக்கு முக்கியமானது. இந்த தொடரை வென்றுவிட்டால், ஆஸ்திரேலிய அணியினர் பெருமை அடையலாம். மிகச்சிறந்த வீரர்கள் என்ற பெயருடன் வரலாற்றில் இடம் பெற முடியும். தவிர, எதிர்வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில்  சாதிப்பதற்கான ஊக்கமாகவும் அமையும். டி.ரா செய்தால் கூட அதுவும் மிகப்பெரிய சாதனையைாகவே பார்க்கப்படும். அதே நேரம் முடிவுகளை பற்றி சிந்திக்காமல் போட்டியில் கவனம் செலுத்துவோம். என்றார்.
 Australias-Steve-Smith-at-016-720x480

Related posts: