இந்தியாவை வென்றத வாங்கிய பங்காளதேஷ் !

Tuesday, November 5th, 2019

இந்திய அணிக்கெதிரான முதல் இருபதுக்கு 20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சர்வதேச இருபதுக்கு ௲ 20 கிரிக்கெட் போட்டி 2005 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. இன்றைய இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையிலான மோதல், ஆண்களுக்கான 1000 ஆவது சர்வதேச இருபதுக்கு ௲ 20 கிரிக்கெட் போட்டியாகும்.

இப் போட்டியில் இந்திய அணியினை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்திய பங்களாதேஷ் அணி வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது. அது மாத்திரமன்றி பங்களாதேஷ் அணி இந்த வெற்றியானது சர்வதேச இருபதுக்கு ௲ 20 அரங்கில் இந்தியாவுக்கு எதிரான முதல் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருபதுக்கு 20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் இருபதுக்கு 20 போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் சர்மா-ஷிகார் தவான் களமிறங்கினர்.

ரோகித் சர்மா 9 ஓட்டங்களிலும், அடுத்து வந்த லோகேஸ் ராகுல் 15 ஓட்டங்களிலும், ஸ்ரேயஸ் ஐயர் 22 ஓட்டங்களிலும் வெளியேற, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிகார் தவான் 41 ஓட்டங்களில் வெளியேற இந்திய அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் ஷாபியூல் இஸ்லாம், அமினுள் இஸ்லாம் தல இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.அதன் பின் 149 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு துவக்க வீரர்களான லிதன் தாஸ் 7 ஓட்டங்களிலும், மொகமத் நயிம் 26 ஓட்டங்களிலும் வெளியேற, அடுத்து வந்த சவுமியா சர்க்கார், முஷ்பிகுர் ரஹிம் ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டனர்.

இந்திய அணியின் பந்து வீச்சை அசால்ட்டாக எதிர்கொண்ட இந்த ஜோடி பங்களாதேஷ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். சவுமியா சர்கார் 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, முஷ்பிகுர் ரஹிம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் வங்கதேச அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சவுமியா சர்கார் அரைசதம் கடந்து அதிகபட்சமாக 60 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்

Related posts: