இந்தியாவை வென்றது இங்கிலாந்து!

Monday, August 6th, 2018

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. கேப்டன் விராட் கோலியின் அபார ஆட்டம் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆனது.

இங்கிலாந்தில் டி 20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்று இந்திய அணி விளையாடி வருகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் பர்மிங்ஹாம் எட்பாகஸ்டன் மைதானத்தில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 287 ரன்களுக்கும், இந்தியா 274 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின.  இந்திய கேப்டன் விராட் கோலி அபாரமாக ஆடி 149 ரன்களுடன் சதமடித்தார்.

இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 193 ரன்கள் இந்தியாவைக் காட்டிலும் முன்னிலை பெற்றிருந்தது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என இந்தியா தனது இரண்டாம் இன்னிங்ஷஸ தொடங்கியது. மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்ட முடிவில் விராட் கோலி 43 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை இந்தியா எடுத்திருந்தது. வெற்றிக்கு  84 ரன்கள் தேவை என்ற நிலையில் சனிக்கிழமை நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆனால் இங்கிலாந்தின் அபார பந்துவீச்சை இந்திய வீரர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. தினேஷ் கார்த்திக் 20, ஹார்திக் பாண்டியா 31, இஷாந்த் சர்மா 11, முகமது சமி ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர்.

பென் ஸ்டோக்ஸ் அபாரம்: கேப்டன் விராட் கோலி 93 பந்துகளில் 51 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 54.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 162 ரன்களை மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் 40 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், சாம் கரன், அடில் ரஷீத் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் ஓரளவு ஆடி வந்த நிலையில் ஸ்டோக்ஸ் ஓரே ஓவரில் கோலி, பாண்டியா ஆகியோர் விக்கெட்டை வீழ்த்தி தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இங்கிலாந்துடன் நடைபெற்ற டெஸ்ட் சிறப்பான ஆட்டமாக அமைந்தது. தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையிலும் நாங்கள் மீண்டு வந்தோம். நாங்கள் பேட்டிங்கில் மேலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இரண்டாம் இன்னிங்ஸில் நமது பந்துவீச்சாளர்கள் திறமையாக வீசினார்கள்.

கேப்டன் கோலி ஒன்றும் கண்ணுக்கு தெரியாதவர் இல்லை. அவரை எளிதாக அவுட் செய்திருக்கலாம். ஆனால் முதல் இன்னிங்ஸில் ஸ்லிப்பில் மோசமானபீல்டிங் செய்து கோலியின் கேட்சை தவற விட்டோம். இல்லையென்றால் அவரால் 149 ரன்களை அடித்திருக்க முடியாது. கோலி போன்ற அபாயமான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இங்கிலாந்து பீல்டிங்கை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

டெஸ்ட போட்டி தொடங்குவதற்கு முன்பு கோலியும்-ஆண்டர்சனும் சொற்போர் நடத்தினர். ஆண்டர்சன் பந்துவீச்சில் 21 மற்றும் 51 ரன்கள் எடுத்திருந்த போது கோலியின் கேட்சை தவற விட்டார் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான். இதனால் ஆண்டர்சன் அதிருப்தி அடைந்தார்.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 287 (ஜோ ரூட் 80),

அஸ்வின் 4-62).

இரண்டாம் இன்னிங்ஸ்: 180, (சாம் கரன் 63, இஷாந்த் சர்மா 5-52).

இந்தியா  முதல் இன்னிங்ஸ்:

274 (விராட் கோலி 149, சாம் கரன் 4-74),

இரண்டாம் இன்னிங்ஸ்:

162, (விராட் கோலி 51,

பென் ஸ்டோக்ஸ் 4-40).

சாம் கரன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

நாங்கள் இரவு முழுவதும் தூங்கவில்லை. அனைத்து வீரர்களும் கேப்டன் கோலியை எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்வது என்பது குறித்தே ஆலோசித்துக் கொண்டிருந்தோம்.

தனது 1000-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும் இங்கிலாந்து இப்போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஷாந்துக்கு 15 சதவீதம் அபராதம்

இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் ஆட்டமிழந்த போது, அதை தரக்குறைவாக இந்திய வீரர் இஷாந்து சர்மா கொண்டாடினார் எனக்கூறி ஆட்ட ஊதியத்தில் 15 சதவீதத்தை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டது. இஷாந்த் தனது மொழி, சைகை, மூலம் மலானை அவமதிக்கும் விதத்தில் செயல்பட்டார் என புகார் எழுந்துள்ளது. ஜெப் குரோ தலைமையிலான நடுவர் குழு இந்த அபராதத்தை விதித்துள்ளது.

இஷாந்தும் தனது செய்கை தவறு என்பதை ஒப்புக் கொண்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 8-ஆவது முறையாக 5 விக்கெட்டை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. அவர் கூறுகையில், சனஸக்ஸ் அணியில் இடம் பெற்று கவுன்டி ஆட்டத்தில் விளையாடிய அனுபவம் மிகவும் உதவியாக இருந்தது. இதனால் கிடைத்த நம்பிக்கை, அனுபவத்தால் சிறப்பாக பந்துவீசினேன். சனஸக்ஸ்  அணியில் விளையாடிய இஷாந்த் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு அரை சதமும் கவுன்டி ஆட்டத்தில் அடித்தார். இங்கிலாந்துடன் முதல் டெஸ்டில் 5-51 விக்கெட்டை வீழ்த்தினார். ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்காதது அதிருப்தியாக இருந்தாலும், கவுண்டி ஆட்டத்தில் பங்கேற்றது தற்போது நன்மை செய்துள்ளது. இங்கிலாந்தின் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு பந்து சிக்கக் கூடாது என திட்டமிட்டு ஸ்விங் செய்தேன். சூரிய வெளிச்சம் இருந்தால் பிரச்னை இல்லை. ஆனால் மேக மூட்டமாகவும், மழை பெய்தால் மட்டுமே ஸ்விங் ஆகிறது என்றார்.

Related posts: