இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய தென்ஆப்பிரிக்கா!

Saturday, October 21st, 2017

வங்காள தேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தென்ஆப்பிரிக்கா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் இருந்தது. அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 4-1 எனக் கைப்பற்றியது.

இதன்மூலம் முதல் இடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்தது.தற்போது தென்ஆப்பிரிக்கா – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இதன்மூலம் மீண்டும் தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது.இரண்டு அணிகளும் தலா 120 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால், தென்ஆப்பிரிக்கா தசமபுள்ளி அடிப்படையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்றால் மீண்டும் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

Related posts: