இந்தியாவை தோற்கடிப்போம்!

Sunday, March 6th, 2016

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா- வங்காளதேஷ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் வங்காளதேஷ் அணியை இந்தியா 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மீண்டும் இரு அணிகளும் இறுதி போட்டியில் மோதுவதால் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்தியாவை எங்களால் வீழ்த்த முடியும் என்று வங்காளதேஷ் அணியின் மூத்த வீரரும், தொடக்க ஆட்டக்காரருமான தமீம் இக்பால் கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீசில் 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் நாங்கள் இந்தியாவை வீழ்த்தியிருந்தோம். இதில் ஜாகீர்கான் பந்தை நான் சிக்சருக்கு விளாசியிருந்தேன். நான் அந்த போட்டியை பற்றி மறந்திருக்கலாம். ஆனால், நீங்கள் தான் (மீடியா) ஞாபகம் படுத்துகிறீர்கள்.

இந்தியாவிற்கு எதிராக நாங்கள் மறக்க முடியாத போட்டிகளை விளையாடியுள்ளோம். எங்களுக்குள் மறைந்திருக்கும் முழு திறமையையும் வெளிக்கொண்டு வந்தால் இந்தியாவை வீழ்த்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக நான் நம்புகிறேன்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியாவை 2-1 என வீழ்த்தியுள்ளோம். அதேபோல் டி20 ஆசியக்கோப்பை இறுதி போட்டியிலும் திரும்பவும் இந்தியாவை வெல்ல முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை

Related posts: