இந்தியாவுடன் வெறித்தனமாக விளையாடுங்கள்!

Thursday, June 15th, 2017

சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுடன் வெறித்தனமாக விளையாடுங்கள் என்று வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் சண்டிகா ஹத்துருசிங்க கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள், மற்றொரு ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.

குறிப்பாக வங்கதேசம், இந்திய அணிகள் மோதும் போட்டியையே பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் Chandika Hathurusingha இப்போட்டி குறித்து கூறுகையில், இந்தியாவுடன் மோதும் போட்டி மிகவும் கடினமானது. அந்தணியுடன் விளையாடும் போது வெறித்தனமாக விளையாட வேண்டும்.

வங்கதேச அணியில் உள்ள இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நேரம் இது. எட்டு சிறந்த அணிகள் மோதும் இந்த தொடரில் நாம் திறமையாக விளையாடி இந்த அளவிற்கு வந்திருக்கிறோம், இந்த வாய்ப்பை தவறவிட்டு விடாதீர்கள். இப்போட்டிக்காக புது வித பயிற்சிகள் எல்லாம் மேற்கொள்ளவில்லை, வழக்கம் போல வீரர்கள் பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனெனில் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்படும் திறனுடையவர்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் புது விதமாக பயிற்சி மேற்கொள்ளும் போது, அது பலன் அளிக்கலாம், இல்லை பலன் அளிக்காமல் போகலாம். அதனால் வங்கதேச வீரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தியா- வங்கதேசம் அணி மோதும் அரையிறுதிப் போட்டி நாளை எட்பேட்ஜ்ஸ்டன் மைதானத்தில் நடைபெறும். மேலும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா, இந்திய அணிக்கெதிரான போட்டியின் போது இலங்கை வீரர்கள் திமிருடன் விளையாடுங்கள் என்று கூறியிருந்தார். அப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts: