இந்தியாவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – இன்சமாம்!

Tuesday, May 28th, 2019

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தும் என அந்நாட்டு தேர்வு குழு தலைவர் இன்சமாம் உல்ஹக் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ள இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் மட்டுமின்றி அனைத்து ஆட்டங்களும் தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் ஆதிக்கத்தை பாகிஸ்தான் முறியடித்து தோல்விப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

உலக கோப்பை அரை இறுதிக்கு இந்தியா,பாகிஸ்தான்,நியூசிலாந்து,இங்கிலாந்து அணிகள் முன்னேறும் எனவும் இன்சமாம் உல்ஹக் கூறியுள்ளார்.

உலக கோப்பை போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான் மோதிய 6 ஆட்டங்களில் இதுவரை பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: